நாகர்கோவில், ஆக.18- ஒன்றிய அரசின் வற்புறுத்தலுக்கு பணிந்து மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். விவசாயிகள் மற்றும் ஏழைய எளிய மக்க ளைப் பாதிக்கும் மின்சார மசோதாவை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிபிஎம் மெதுகும்மல் வட்டாரக் குழு சார்பாக சூரியகோடு மின்சார வாரிய அலு வலகம் முன்பு வியாழனன்று (ஆக.18) நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கே.தங்கமணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்டக்குழு உறுப் பினர் எஸ்.சிதம்பரகிருஷ்ணன் உள் ளிட்டோர் பேசினர். ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுபோல் கொல்லங்கோடு மற்றும் அடைக்காகுழி வட்டாரக்குழுக்கள் சார்பில் கொல்லங்கோடு மின்சார அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரெஜி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயமோகன் துவக்கி வைத்தார். வட்டாரக்குழு உறுப்பி னர்கள் அஜித் குமார், ஹரிகுமார், சனல் குமார், மேரிதாசன், சுனில் குமார், சுரேஷ், மதுசூதனன், லெனின், சரோஜா, ஸ்டீபன், பிராங்கிளின், ஹெப்சி பாய், ஜஸ்டின் மற்றும் ஏராமானோர் கலந்து கொண்ட னர். மின்சார வாரிய இளநிலை பொறியா ளரிடம் பொதுமக்கள் சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன.