சென்னை:
ரெம்டெசிவிர் மருந்து வாங்க பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சென்னையில் குவிகின்றனர். இந்நிலை 4-வது நாளாக வியாழனன்றும் தொடர்ந்தது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து அரசால் ஒரு சில இடங்களில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதில்சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் திங்கட்கிழமையில் இருந்து ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள திருவாரூர், கோவை, பெரம்பலூர், தஞ்சை, திருவள் ளூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்க4- வது நாளாக வியாழனன்றும் கீழ்ப்பாக்கம்அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.இதனால் கொரோனா தொற்று அதிகஅளவில் பரவக்கூடும் என மருந்து வாங்க வந்தவர்கள் அச்சத்துடன் கூறுகின்றனர்.மேலும் ரெம்டெசிவிர் மருந்துக்காக இரவு, பகலாக காத்திருக்கும் தங்களுக்கு தமிழக அரசு முறையான ஏற்பாடுகள் செய்துதரவில்லை என்றும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கி 4 நாட்கள் ஆகியும் போதிய அடிப்படை வசதிகள் கூட இல்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.