ஆதமங்கலம் புதூரில் காளை விடும் விழா
திருவண்ணாமலை, ஜன.18- திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் ஆதமங்கலம்புதூர் கிராமத்தில் காணும் பொங்கலையொட்டி 104 ஆவது ஆண்டாக காளை விடும் விழாவெகு விமர்சையாக நடைபெற்றது. பொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு ஆண்டும் ஆதமங்கலம்புதூர் கிராமத்தில் காளை விடும் விழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு காணும் பொங்கலை முன்னிட்டு காளை விடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த போட்டியில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஓசூர், கிருஷ்ணகிரி, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளை மாடுகள் பங்கேற்றது. வீரளூர், காந்தபாளையம், பட்டியந்தல், ஆதமங்கலம்புதூர், சிறுவள்ளுர், கேட்டவரம்பாளையம், மேல்சோழங்குப்பம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு காளை விடும் விழாவை கண்டு களித்தனர்.
