tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

பிராட்வே பேருந்து நிலையம் செயல்படும்

சென்னை, ஜன. 6– பிராட்வே பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்படும் என சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், சென்னையில் பிராட்வே பேருந்து நிலையத்திலி ருந்து இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் புதனன்று (ஜன.7) முதல் தீவுத்திடல் மற்றும் ராயபுரம் தற்காலிக பேருந்து நிலை யங்களிலிருந்து இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், நிர்வாக கார ணங்களால் இந்த பேருந்து நிலையம் மாற்றம் தற்காலி கமாக தள்ளி வைக்கப்படு கிறது. மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும். அதுவரை பிராட்வே பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்படும் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.

வாலிபருக்கு ஆயுள் தண்டனை

சென்னை, ஜன.6- சென்னையில் 2022-ஆம் ஆண்டு 15 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 26 வயது வாலிபருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ.65ஆயிரம் அபராதமும் விதித்து திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் துறையினர் நடத்திய துரிதப் புலனாய்வின் மூலம் குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தரப்பட்டதை அடுத்து, காவல் குழுவினரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

தங்கம் விலை உயர்வு

சென்னை, ஜன.6- சென்னையில்  22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 830 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.  வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 271 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 2 லட்சத்து 71 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

பெண் காவலரைத் தாக்கிய  4 பேர் கைது

சென்னை, ஜன.6- மயிலாப்பூர் ராதா கிருஷ்ணன் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடு பட்டிருந்த பெண் காவலர் நந்தினியை, போக்குவரத்து விதிமீறலைத் தட்டிக் கேட்டதற்காக ஒரு கும்பல் தாக்கிவிட்டுத் தப்பி யோடியது.  இச்சம்பவம் தொடர் பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ராயப்பேட்டை மற்றும் மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த பெருமாள், பிரேம்குமார், ஜீவா மற்றும் சீனிவாசன் ஆகிய நான்கு பேரைக் கைது செய்தனர். இதில் கைதான ஜீவா மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.