tamilnadu

img

குடிமனைப் பட்டா கேட்டு கிராம நிர்வாக அலுவலகம் முற்றுகை

திருவள்ளூர், செப்.18-  குடிமனை பட்டா கேட்டு கவரைப்பேட்டையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம், கும்மி டிப்பூண்டி அருகில் உள்ள மேல்முதலம்பேடு, ஏ.என்.குப்பம் ஆகிய கிராமங்களில் ஆதிதிராவிடர் மக்கள் மற்றும் அரியத்துறை பகுதி யில் வசிக்கும் இருளர் இன மக்கள் பல தலைமுறையாக வாழ்ந்து வருகின்ற னர்.  இவர்களுக்கு  குடிமனைப் பட்டா இல்லை.  மாவட்ட ஆட்சியர்,  வட்டாச்சியர் ஆகியோருக்கு பட்டா கேட்டு பல முறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதன் பிறகு  கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏ.என்.குப்பத்தி லிருந்து   12 கிலோமீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு, வட்டாச்சி யரிடம் மனு அளித்துள்ளனர். அப்போதும் அவர்கள் கோரிக்கை நிறைவேறவில்லை. இந்நிலையில்  இருளர் இன மக்களுக்கு குடிமனைப்பட்டா கேட்டு கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் கவரைப்பேட்டையில் உள்ள கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தை  முற்றுகையிட்டனர். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பழைய வீடுகள் உள்ள இடங்களுக்கு உடனடி யாக பட்டா வழங்கப்படும். இருளர் இன மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.  இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த முற்றுகைப் போராட்ட த்திற்கு கட்டுமான சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் எம்.சி.சீனு தலைமை தாங்கினார்.  சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால், வட்டச் செயலாளர் இ.ராஜேந்தி ரன், கைத்தறி நெசவு தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.சூர்ய பிரகாஷ், வாலிபர் சங்க பகுதிச் செய லாளர் எஸ். டில்லிதுரை, கட்டுமான சங்க நிர்வாகிகள் கணேசன், தியாகு, மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.