tamilnadu

img

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு.... முஸ்லீம் லீக் - 3 தொகுதிகள்.... மனிதநேய மக்கள் கட்சி - 2 தொகுதிகள்....

சென்னை:
திமுக தலைமையிலான கூட்டணியில் கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது .

திமுக பொருளாளர்  டி.ஆர். பாலு தலைமையிலான குழு   இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் திங்களன்று பேச்சுவார்த்தை நடத்தியது.  இதன் முடிவில்  மனிதநேய மக்கள்கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  இதற்கான தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - மமக தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் கையெழுத்திட்டனர். எந்த சின்னத்தில் போட்டி, எந்தெந்த தொகுதி என்பது பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

முஸ்லிம் லீக்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப் பட்டது. இதற்கான தொகுதி ஒதுக்கீடுஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனிச் சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.