சென்னை:
புரெவி புயலின் தாக்கத்தால், சென்னையில் கனமழை பெய்த நிலையில் 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் புரெவி புயல் இலங்கையில் கரையைக் கடந்த நிலையில், ராமேஸ்வரம் பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இதன் காரணமாக தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருவதோடு, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில், புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 12 விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.அதாவது, சென்னை விமான நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமானங்களும், தூத்துக்குடிக்கு இரு மார்க்கமாக செல்லும் 3 விமான சேவைகளும் வியாழனன்று ரத்து செய் யப்பட்டன. பயணிகள் விமான நிலையத்தை தொடர்பு கொண்டு, தகவல்களை கேட்டறியலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.