tamilnadu

img

பயிற்சி விமான விபத்தில் கருப்புப் பெட்டி மீட்பு!

நேற்று விபத்துக்குள்ளான பயிற்சி விமான விபத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திரூப்போருர் அருகே விமானப்படையின் பயிற்சி விமானம் நேற்று கீழே விழுந்து நொறுங்கிய விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி சாதுரியமாக பாராசூட் மூலம் உயிர்தப்பினார். இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
விமானம் முழுவதுமாக விழுந்து நொறுங்கியதில், விமானத்தின் பாகங்கள் சேற்றில் சிக்கியது. விமான விபத்தின் காரணத்தை கண்டறிய உதவும் கருப்புப் பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் சேற்றில் 15 ஆழத்தில் சிக்கிய கருப்புப் பெட்டி தற்போது மீட்கப்பட்டுள்ளது.