tamilnadu

யாகம் நடத்தியதால் எவ்வளவு மழை பெய்தது? அறநிலையத்துறையிடம் விளக்கம் கேட்டு மனு

சென்னை, மே 9- கோவில்களில் யாகம் நடத்திய பிறகுஎந்தெந்த ஊர்களில் எவ்வளவு மழை பெய்தது என்று அறநிலையத்துறையிடம் விளக்கம் கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மழை பொய்த்துமக்கள் தண்ணீருக்காகத் திண்டாடுகிறார்கள். இந்நிலையில், மழை வேண்டிகோவிகளில் சிறப்பு வழிபாடுகள்யாகங்கள் நடத்தும் படி அறநிலையத்துறைஉத்தரவிட்டது. கோவில்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அந்த துறையே இதற் கான ஏற்பாடுகளைச் செய்தது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பும் கிளம்பியது. அரசாங்கம் மதச் சார் பற்றது. அது எப்படி இவ்வாறு நடத்துவதை ஊக்குவிக்கலாம் என்று பலர் விமர்சித்தனர். இந்த நிலையில் கருப்பணசாமி என்ற ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அறநிலையத்துறைக்கு ஒரு மனு அனுப்பியிருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:-யாகம் செய்தால் மழை வரும் என்ற விதி மற்றும் அரசாணையின் நகல்களை அளிக்க வேண்டும். மேலும் கோவில்களில் யாகம் நடத்திய பிறகு எந்தெந்த ஊர்களில் எவ்வளவு மழை பெய்தது என்ற விவரங்கள் தேவை. மழை வேண்டி கோவில்களில் யாகம் நடத்த எவ்வளவு செலவானது? எந்த அதிகாரத்தின் அடிப்படையில் கோவில் களில் மழைவேண்டி யாகம் நடத்த இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டார் என்ற விவரத்தையும் அளிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.