சென்னை:
பொதுமக்களை போலீசார் அடிப்பது மிகவும் தவறான செயல் என்றும் மக்களை தாக்குவதும், துன்புறுத்துவதும் சட்டப்படி தவறு என்றும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார்.வாகன தணிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஞாயிறன்று (ஜூன் 28) ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தளர்வில்லாத ஊரடங்குக்கு மக்கள் ஒத்துழைப்பு உள்ளது. 52,234 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 60,131 வழக்குகள் முகக்கவசம் அணியாமல் சென்றதற்காக 23,704 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இ.பாஸ் தவறாக பயன்படுத்தக் கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.பொதுமக்களை போலீசார் அடிப்பது மிகவும் தவறான செயல். மக்களை தாக்குவதும், துன்புறுத்துவதும் சட்டப்படி தவறு. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே வாகனம், பொதுமக்களுக்கு அளிக்கப்படுகிறது. போலி இ-பாஸ் பயன்படுத்தி சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,065 போலீசாரில் 410 பேர் குணமடைந்து திரும்பியுள்ளனர். கொரோனா பாதித்த போலீசாருக்கு நிவாரண நிதி கிடைப்பது தொடர்பான நடவடிக்கை பரிசீலனையில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.