பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்ட இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மதுரை புறநகர் மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்ற போராட்டத்தில், ஆட்டோ தொழிலாளர்கள் பெருவாரியாக பங்கேற்றனர். கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி தூக்கி வந்த அவர்கள், ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து வந்தனர்.