tamilnadu

img

அநியாயமாக அபராதம் விதிப்பதை தடுக்க ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் கோரிக்கை

வேலூர், அக் 24 - வேலூரில் ஆட்டோக்களுக்கு அநியாயமாக அபராதம் விதிப்பதை கைவிடக் கோரியும், பொது மக்களுக்கு எந்த வகையிலும் பாது காப்பு இல்லாத பைக் டாக்சிகளை தடுத்திட வலியுறுத்தியும் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்க சிஐடியு தலைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். வேலூர் மாநகரின் மையமான பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமான ஆட்டோ தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதிய பேருந்து நிலையம், காட்பாடி ரயில் நிலை யம் பகுதிகளுக்கு தங்களின் வாழ்வாதா ரத்திற்காக ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர்.  ஏற்கனவே பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வு மற்றும் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன திருத்த சட்டத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் இன்சூரன்ஸ் கட்டண உயர்வு, மகளிர் இலவச பேருந்து போக்குவரத்தாலும் தொழில் நலிவடைந்த நிலைக்கு சென்றுள்ளது. இந்த நிலையில் பழைய , புதிய பேருந்து நிலையம், கிரீன் சர்க்கிள் பகுதிகளில் பயணிகளை ஏற்றி இறக்கும் போது போக்குவரத்து காவல்துறை துறையினர் தொழி லாளர்கள் மீது ( சீருடை அணிய வில்லை, கூடுதலாக பயணிகளை ஏற்றுவதாக) பொய் வழக்கை பதிவு செய்து ரூபாய் ஆயிரம் முதல் ஐயாயிரம் வரை அபராத தொகை விதிக்கின்றனர்.  மறுபக்கம் புதிதாக ஊபர், ஓலா, ரேபிடோ என்று பெருநிறுவனங்கள் பைக் டாக்சிகளை தற்போது இயக்க ஆரம்பித்து சவாரிக்கு அழைத்து செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்த  பைக் டாக்சியில் செல்லும் பயணிகளுக்கு எவ்வித பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதனால் அந்த தொழி லாளர்களின் வாழ்வாதாரம் கடுமை யாக பாதிப்பதோடு  கேள்விக்குறியாகி யுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதில் தலையிட்டு போக்குவரத்து காவல்துறை அநியாய அபராதம் விதிப்பதை கைவிடக் கோரியும், பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதுகாப்பு இல்லாத பைக் டாக்சிகளை தடுத்திட கோரி மனு அளித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் டி.முரளி, மாவட்டத் தலைவர் கே.ராஜா, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.காசி, ஆட்டோ சங்க கிளை நிர்வாகிகள் அக்பர், பாபு சேட் மற்றும் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சி.எஸ்.மகாலிங்கம் ஆகி யோர் உடன் இருந்தனர்.