districts

img

தீபாவளி போனஸ் கோரி 3 ஆவது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, அக்.24- திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. இதில் தினமும் சுமார் 400 டன் குப்பைகளை சேக ரித்து  அகற்றும் பணி நடைபெறு கிறது.  இப்பணியை புதுக்கோட்டையை சேர்ந்த வேதா என்ற தனியார் நிறு வனம் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 18 மாதங்களாக செய்து வருகிறது. இந்த நிறுவனத்திடம்  1700 தூய்மை பணியாளர்களும், 300 குப்பை வாகன ஓட்டுனர்கள் என 2000 பேர்  ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர்.  கூலி குறைப்பு இதற்கு முன் இவர்கள் மகளிர் சுய உதவிக்குழு மூலம் இப்பணியை செய்த பொழுது ரூ.650 தினக்கூலி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வேதா நிறுவனம்  ரூ.575 மட்டுமே கொடுக்கிறது. எனவே முன்பு வழங்கப்பட்ட தினக்கூலி ரூ.650 ஐ வழங்கக் கோரி சிஐடியு திருச்சி மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கம் தலைமை யில் கடந்த 18 மாதங்களாக தூய்மை பணியாளர்கள் போராடி வருகின்ற னர்.

இந்நிலையில் தூய்மைப் பணி யாளர்கள் தங்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கக் கோரி வேதா நிர்வாகத்திடம் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வலியுறுத்தி வந்தனர். ஆனால் வேதா நிர்வாகம் போனஸ் தர மறுத்து விட்டது. இதனைக் கண்டித்தும், போனஸ் வழங்க வலியுறுத்தியும் சிஐடியு திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்கம் தலைமையில், தூய்மைப் பணி யாளர்கள் செவ்வாயன்று மாலை திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். அப்போது அங்கு பாது காப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீ சார் மாநகராட்சி வாசல் கதவுகளை பூட்டி மாநகராட்சிக்குள் தூய்மைப் பணியாளர்களை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.  இதையடுத்து அனைவரும் மாநகராட்சி அலுவலகம் முன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சிஐடியு திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் இளைய ராஜா தலைமை வகித்தார். கோ ரிக்கைகளை வலியுறுத்தி சங்க மாவட்டச் செயலாளர் மாறன், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலா ளர் ரெங்கராஜன், சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் லெனின், கார்த்திகேயன், தரைக்கடை சங்க மாவட்டச் செயலாளர் செல்வி, மாவட்டத் தலைவர் கணேசன் ஆகி யோர் பேசினர். 

பின்னர் இதில் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு வேதா நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். ஆனால் இரவு வெகுநேரமாகி யும், எவ்வித பேச்சுவார்த்தைக்கும் வராததால், இதனைக் கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன் தரை யில் அமர்ந்து இரவு முதல் விடிய விடிய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இரண்டாவது நாளாக புதனன்றும் போராட்டம் தொ டர்ந்தது. இதையடுத்து, போராட் டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகி களை பேச்சுவார்த்தைக்கு வரும்படி அதிகாரிகள் அழைத்தனர். 

வேதா நிறுவன பணியாளர்கள் மிரட்டல்

பேச்சு வார்த்தைக்கு நிர்வாகிகள் சென்றபோது வேதா நிறுவனத்தின் பணியாளர்கள், ஒப்பந்த ஊழியர்க ளிடம் போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு வரச் சொல்லி மிரட்டும் வகையில் பேசினர்.  இதை கண்டித்தும் தொழிற் சங்க நிர்வாகிகளை தாக்க முற்பட்ட வர்களை கைது செய்ய கோரியும், வேதா நிறுவன ஊழியர்களை இங்கி ருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி யும் தூய்மைப் பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர், வேதா நிர்வாக ஊழியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டத்தின் மூன்றாவது நாளான வியாழனன்று தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது.  பின்னர் சிஐடியூவினர் மைக் செட் இல்லாமல் தூய்மைப் பணியா ளர்கள் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். இதில் சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், சுமைப்பணி சங்க மாவட்டச் செய லாளர் சிவக்குமார், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எஸ். ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், 35 ஆவது மாவட்ட உறுப்பினர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.