திருவண்ணாமலை, செப். 9- திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டத்தை சேர்ந்த தலித் விவசாயி சேட்டு என்பவரின் நிலத்தை அபக ரித்து மிரட்டல் விடுப்பவர்களிடமிருந்து, தனது குடும்பத்தி னரை காப்பாற்றக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாது காப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்தி நிறுத்தி காப்பாற்றினர். பின்னர் காவல்துறையினர் விசாரணையின்போது, ராந்தம் கிராமத்தை சேர்ந்த சின்னபையன் என்பவரின் மகன் சேட்டு (57). தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் விவசாய தொழில் செய்து வருவதும் தெரிய வந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு இவரது இளைய மகன் வேல்முரு கன் செய்யாறை சேர்ந்த, தெய்வசிகாமணியுடன் கூட்டு சேர்ந்து, ஸ்ரீனிவாஸ் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். வசூல் பணத்தை கட்டவில்லை என்று மகனை கடத்திச் சென்று மிரட்டி சொத்தை அடமானம் எழுதி வாங்கியதாகவும், அதிலிருந்து மாதந்தோறும் வட்டி;ப பணம் வாங்கிவருவதாகவும் அவர்களிடமிருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற வழி தெரியாததால் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்திருக்கிறார். பின்னர் அவரிடமிருந்த மனுவை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ள னர்.