tamilnadu

img

அம்பத்தூர் எஸ்டேட்டில் தொற்றுநோயை உற்பத்தி செய்யும் மழைநீர் கால்வாய்கள்

அம்பத்தூர், பிப். 24- அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் கால்வாய்கள் பராமரிப்பின்றி உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டால் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அம்பத்தூர், பாடி, கொரட்டூர், முகப் பேர், அத்திப்பட்டு, மண்ணூர்பேட்டை, மங்களபுரம், பட்டரைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய நிறுவனங்கள் உள்ளன. மேலும் ஏற்று மதி ஆடை நிறுவனங்கள், சாப்ட்வேர், கால் சென்டர்களும் உள்ளன. இங்கு சென்னை, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து தினசரி 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வந்து செல்கின்றனர். இந்த தொழிற் பேட்டையின் உட்புற சாலைகளின் ஓரங்களில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இவை பல இடங்களில் திறந்த நிலையிலேயே உள்ளன. மேலும் இந்த கால்வாயில் கழிவு நீரும், கார் பழுது பார்ப்பு நிறு வனங்களில் இருந்தும் ஆயில் கலந்த அசுத்தமான தண்ணீர் விடப்படுகிறது. அதேபோல் ரசாயன, ஏற்றுமதி ஆடை நிறுவனங்களில் இருந்து வெளி யேறும் கழிவு நீரும் மழைநீர் கால்வாயில் விடப்படுகிறது. தொழிற்சாலைகளின்  கழிவுகளும் பல இடங்களில் கால்வாயில்தான் கொட்டப்படுகிறது. இதனால் மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. இந்த கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கால்வாயில் தூர்நாற்றம் வீசுகிறது. இந்த கால்வாய்கள் பல இடங்களில் முறையாக பராமரிக்காததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாநாகராட்சி நிர்வாகமோ அல்லது சிட்கோ நிர்வாகமோ உடனடி யாக மழைநீர் கால்வாய்களை மூடி பராமரிக்க வேண்டும். கழிவு நீர், ரசாயனம், ஏற்றுமதி ஆடை நிறுவன கழிவுகள் கலக்காமல் தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என தொழி லாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.