சென்னை, ஏப்.19-திருப்பரங்குன்றம், ஒட்டப் பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக் கான பொறுப்பாளர்களை திமுக அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியான 22 சட்டப்பேரவை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு ஏப். 18 அன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. மீதமுள்ள நான்கு தொகுதிகளான திருப்பரங்குன்றம், ஒட்டப் பிடாரம், அரவக்குறிச்சி, சூலூருக்கு வரும் மே மாதம் 19ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த 4 தொகுதிகளுக் கும் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களை திமுக தலைமை கழகம் நியமித்து அறிவித்துள்ளது. அதன் விவரம் வரு மாறு:-திருப்பரங்குன்றம் தொகுதிக்கு பொறுப்பாளர்களாக- துணை பொதுச் செயலாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன், மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ.,தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் சு.கல்யாண சுந்தரம், விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., மதுரை மாநகர மாவட்டப் பொறுப்பாளர் கோ.தளபதி. சிவகங்கை மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ. சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்ஏ. திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ.ஆவுடையப்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை. சந்திரசேகர், ஜெ.அன்பழகன், கே.எஸ்.மஸ்தான், ஆண்டி அம்பலம், இன்பசேகரன், ஈஸ்வரன், வசந்தம் கார்த்திகேயன், கோவி.செழியன் மற்றும் கம்பம் ராமகிருஷ்ணன், முத்துராமலிங்கம், ஆவடி சா.மு.நாசர், நிவேதா முருகன்.
ஒட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர்கள்- திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு, தூத்துக் குடி தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன்.கனிமொழி எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரன், ஆஸ்டின், கீதாஜீவன், மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., சுரேஷ்ராஜன், ரகுபதி, கணேசன், மனோ.தங்கராஜ், எஸ்.ஆர்.ராஜா, ப.ரங்கநாதன், மு.பெ.கிரி, இ.கருணாநிதி, கே.எஸ்.ரவிச்சந்திரன் மற்றும் அப்துல் வகாப், பத்மநாபன்.அரவக்குறிச்சி தொகுதி பொறுப்பாளர்கள்- விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ., கரூர் மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி.முத்துசாமி, டி.எம்.செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர்கள் அர. சக்கரபாணி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், ஆர். காந்தி, பெரியண்ணன், சுந்தர், மாதவரம் சுதர்சனம், எழிலரசன், ராமர், சவுந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார் மற்றும் காந்திசெல்வன், மூர்த்தி, அங்கயற்கண்ணி, பி.தியாகராஜன், சிவசங்கர்.சூலூர் தொகுதி பொறுப் பாளர்கள் - திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ., கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ்.சட்டமன்ற உறுப்பினர்கள் தா.மோ.அன்பர சன், ஏ.பி.நந்தகுமார், ஆ.ராசா, ராஜேந்திரன், கார்த்திக், தடங்கம் சுப்பிரமணி, செங்குட்டுவன், பிரகாஷ், ஜெயராமகிருஷ்ணன், டி.ஆர்.பி.ராஜா, தாயகம் கவி, கார்த்திகேயன், நல்லதம்பி, முபாரக், ராமச்சந்திரன், செல்வராஜ், நல்லசிவம் மற்றும் சிவலிங்கம், வீரபாண்டி ராஜா, பத்மநாபன், செல்ல பாண்டியன், சிவானந்தம்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.