சென்னை:
தமிழக அரசின் வழக்குகளில் ஆஜராக இரண்டு கூடுதல் தலைமை வழக்கறிஞர்களாக எம்.ஸ்ரீசரன் ரங்கராஜன், கே.குமரேஷ் பாபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசின் 11வது கூடுதல் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள எம்.ஸ்ரீசரன் ரங்கராஜன் மதுரை கிளையிலும், அரசின் 12வது கூடுதல் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள கே.குமரேஷ் பாபு சென்னை பிரதான அமர்விலும் தமிழக அரசின் வழக்குகளில் ஆஜராவார்கள்.இதற்கான உத்தரவை பொதுத்துறையின் முதன்மை செயலாளர் செந்தில்குமார் பிறப் பித்துள்ளார்.அரசு வழக்கறிஞர்கள் - நியமனம்உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக அரசின் சிறப்பு வழக் கறிஞர்களாக 5 பேர், அரசின் கூடுதல் வழக்கறிஞர்களாக 4 பேர் நியமிக் கப்பட்டுள்ளனர்.மதுரை கிளையில் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் ஆஜராக 14 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர்.ஏற்கனவே அரசு வழக்கறிஞர்களாக இருந்து பதவிகாலம்.முடிந்த 9 பேருக்கு ஆகஸ்ட் 1 முதல் மேலும் இரண்டு ஆண்டிற்கு நீட் டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.இதற்கான உத்தரவுகளை பொதுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் பிறப்பித் துள்ளார்.