tamilnadu

img

விடைத்தாள் திருத்துவதில் அலட்சியம் 500 ஆசிரியர்க்கு நோட்டீஸ்

சென்னை:
12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்துவதில் கவனக்குறைவாக செயல்பட்டதாக 500 ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த வருடம் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண் கூட்டலில் தவறு ஏற்பட்டுள்ளதை விடைத்தாள் நகல் வாங்கிய பல மாணவர்கள்  பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 100க்கு 72 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவருக்கு 27 மதிப்பெண் பெற்றதாக கூட்டலில் தவறு இழைத்து தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல ஒரு பாடத்தில் 81 எடுத்த மாணவனுக்கு 57 பெற்றதாக கொடுத்துள்ளனர். இந்த தவறுகள் மதிப்பெண்களை கூட்டும்போது ஏற்பட்ட பிழையாகும். இதுபோல பல மாணவர் களுக்கு கூட்டல் பிழையுடன் மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு 72 மையங்களில் 25 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத் தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட
னர். சுமார் 60 லட்சம் விடைத் தாள்கள் திருத்தப் பட்டன. 50 ஆயிரம் மாணவர்கள் விடைத்தாள் நகல் nகேட்டு விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு  வழங்கப்பட்ட விடைத்தாள் நகலை பார்த்த போதுதான் கூட்டலில் பிழை ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.

மேலும் ஒரு சில விடைத்தாள்கள் முறையாக திருத்தப்படாமல் மதிப்பெண் வழங்கப்படாமல் இருந்ததும் தெரிய வந்தது. 4,500 பேர் மறு மதிப்பீடு செய்யுமாறு விண்ணப்பித்து இருந்த நிலையில் ஆசிரியர்களின் தவறுகள் கண்டு பிடிக்கப்பட்டன.விடைத்தாள் திருத்தம் செய்வதில் எவ்வாறு தவறு செய்திருக்கிறார்கள் என்பதை இணை இயக்குநர்கள் கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல் கட்டமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

500க்கும் அதிகமான  ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள் ளது. இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி கூறியதாவது:-
மறு கூட்டல், மறு மதிப்பீடு செய்யும்போது ஆசிரியர்களின் தவறு தெரிய வருகிறது. கடந்த காலங்களை விட படிப்படியாக தவறுகள் குறைந்துள்ளது. கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது பள்ளி கல்வித்துறை இயக்குனர் தான் நடவடிக்கை எடுப்பார். நாங்கள் அவர்களின் பட்டியலை கொடுத்து விடுவோம். தலைமை கண்காணிப்பாளர், எஸ்.ஒ, வி.ஒ உள்பட 4 பேர் விடைத்தாள் திருத்தம் செய்வதற்கு பொறுப்பாளர்கள். அவர்களை மீறி தவறுநடந்திருக்காது என்றால் அதற்கு அவர்களும் பொறுப்பாவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
sheet