tamilnadu

img

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கான முன்னேற்பாடுகள் தயார் - திருப்பூர் மாவட்ட ஆட்சியர்

திருப்பூர், மே 26 - மேல்நிலை வகுப்புகளுக்கான தேர்வுகள் திருத்தும் பணியின் ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக உள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் க. விஜயகார்த்திகேயன் தெரிவித் துள்ளார். திருப்பூர் தெற்கு வட்டம், காங்க யம் சாலையிலுள்ள சென்சுரி பவுண்டேசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங் களில் நடைபெற்ற மேல்நிலை பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீடு  செய்யும் பணிக்காக மேற்கொள்ளப் பட்டுள்ள முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் க. விஜயகார்த்தி கேயன், செவ்வாயன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரலில் நடைபெற்ற மேல்நிலை பொதுத்தேர்விற்கான விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிகள் புதன் முதல் துவங்கவுள்ளது. கே. செட்டிபாளையம் விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, கென்சுரி பவுண்டேசன் மேல்நிலைப்பள்ளி,  தி பிரண்ட் லைன் மேல்நிலைப்பள்ளி, விவேகம் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆர்.ஜி.எம் மேல்நிலைப்பள்ளி ஆகிய  5 மையங்களில் இப்பணிகள் நடை பெறவுள்ளது.

மேல்நிலை பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில் பணிபுரிய வெளி மாவட்டத்தில் தங்கியுள்ள மற்றும் மாவட்டத் திற்குள் உள்ள பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் மையங்களுக்குச் சென்று வர போக்குவரத்துறையின் சார்பில்  போக்குவரத்து வசதிகள் மேற்கொள் ளப்பட்டுள்ளது.  இப்பணிக்காக முதன்மை தேர்வா ளராக 200 நபர்களும், கூர்ந்தாய்வு அலுவலராக 200 நபர்களும் உதவி தேர்வாளராக 1200 நபர்களும் மற்றும் 87 அலுவலக பணியாளர்களும் இப்பணிகளில் ஈடுபட உள்ளனர் .மேலும், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்மையங்களில் கிருமி நாசினி தெளிப்பு, கைகளை சுத்தபடுத்தும் பொருட்டு தேவையான பொருட்களு டன் உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

இந்நிலையில், அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள அளவே பேருந்தில் ஆசிரியர்கள் அழைத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்,  மதிப்பீட்டு முகாமில் பணிபுரியும்  ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்க ளுக்கு முகக்கவசங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இவ் வாறு ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ் வின் போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ்குமார், பள்ளி முதல்வர் ரேணுகா, திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் சுந்தரம், உட்பட பலர் உடன் இருந்தனர்.