சென்னை, ஆக. 13 - கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டி ருந்த கொரோனா சிகிச்சை மையத்தை சென்னை மாநக ராட்சி மூடியது. சென்னையில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் 1,300 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது. சுமார் 11 ஆயிரம் பேர் சிகிச்சை மையங்களி லும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளி லும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இதனையடுத்து சென்னை அண்ணா பல்கலைக்கழக கொரோனா மையம் மூடப்பட்டது. இருப்பினும், படுக்கை கள் எதுவும் அகற்றப்படாமல் அப்படியே உள்ளது. தேவைப் பட்டால் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.