சென்னை, ஏப்.22-அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாள ராக இருந்து வந்த தினகரன், நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில்ஒரே சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் தினகரன் கோரினார். ஆனால் அவரது கட்சி பதிவு செய்யவில்லை என்பதால் தேர்தல் ஆணையம் கைவிரித்தது. பிறகு,உச்சநீதிமன்ற தலையிட்டால்ஒரே சின்னம் கிடைத்தது. இந்த நிலையில், அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்ய வசதியாக அ.ம.மு.க. பொதுச் செயலாளராக தினகரன் தேர்வுசெய்யப்பட்டார். இதனைதொடர்ந்து, தில்லியிலுள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் அ.ம.மு.க. கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.அக்கட்சியின் வக்கறிஞர்செந்தூர் பாண்டியன் இதற்கான ஆவணங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் வழங்கினார். பின்னர் அவர் கூறும்போது கட்சியை பதிவு செய்வதற்குதேவையான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ளோம் என்றார்.