வேதாரண்யத்தில் அம்பேத்கரின் சிலையை உடைத்த கயவர்களை கைது செய்ய வலியுறுத்தி காட்டுமன்னார் கோயில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜெயக்குமார், இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் முன்பு மாவட்ட துணைத் தலைவர் தங்கவேலு தலைமையில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வி.குபேந்திரன் மற்றும் பலர் உரையாற்றினர்.