tamilnadu

img

“முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும்” - திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

சென்னை – நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் திமுக எம்பிக்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து  கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தின் முதல் நாளிலே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது உயிரிழந்த விவசாயிகளுக்கு ஒருநிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.