யூடியூபர் சுதர்சன் மீது அவரது மனைவி வரதட்சணை புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சுதர்சன் என்பவர் டெக் சூப்பர் ஸ்டார் என்ற யூடியூம் சேனல் நடத்திவருகிறார். இவர் விமலா தேவி என்ற மருத்துவரை காத திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் சுதர்சன் மீது அவரது மனைவி தேனி எஸ்.பி அலுவலகத்தில் வரதட்சணை புகார் அளித்துள்ளார்.
மேலும் திருமணத்தின் போது 30 சவரன் நகை, ரூ.5 லட்சம் பணம் மற்றும் சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாகப் பெற்றதாகவும், தற்போது கூடுதல் பணம், நகை கேட்டு மிரட்டுவதாகவும் சுதர்சன் உட்பட 5 பேர் மீது தேனி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.