இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் பலி
மதுராந்தகம், பிப். 22- செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கொளத்தூர் மாலச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் மகன் பிரேம்குமார் (27). இவர் சனிக்கிழமை (பிப். 21) இரவு 7:00 மணியளவில், தனது நண்பரான பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் முதுகரையில் இருந்து பவுஞ்சூர் நோக்கிச் சென்றார். மேலக்கண்டை சுடுகாடு அருகே சென்றபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்துடன் இவர்களது வாகனம் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில், எதிரே வந்த கீழக்கண்டை கிராமத்தைச் சேர்ந்த திரு. ராமதாஸ் மகன் திரு. திவாகர் (22) மற்றும் திரு. பிரேம்குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த திரு. விக்னேஷ் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அணைக்கட்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செம்பியத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது
சென்னை, பிப். 22- சென்னை செம்பியம் பகுதியில் நள்ளிரவில் பைக்கில் டீ வியாபாரம் செய்து வந்த இளைஞர் மற்றும் வாடிக்கையாளர்களிடம் பணம், செல்போன்களைப் பறித்துச் சென்ற இருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். ஓட்டேரியைச் சேர்ந்த ஆகாஷ் (25) என்பவர் கடந்த பிப். 11 அன்று டீ விற்றுக்கொண்டிருந்தபோது, 5 பேர் கொண்ட கும்பல் அவரை மிரட்டிப் பணம் மற்றும் உடைமைகளைப் பறித்துச் சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில், பெரம்பூரைச் சேர்ந்த யோகேஷ் (எ) யுவராஜ் (21) மற்றும் ஜெகதீஷ் (22) ஆகியோரைச் செம்பியம் காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து வழிப்பறி பொருட்களை மீட்டனர்.
5 மாத கர்ப்பிணி தற்கொலை கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
விழுப்புரம், பிப். 22- விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே, காதல் திருமணம் செய்து 11 மாதங்களே ஆன நிலையில், வரதட்சணை கொடுமையால் 5 மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணைவலம் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி (21), சென்னையில் கார் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார். இவரும் அனுஷா (21) என்பவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 11 மாதங்களுக்கு முன்பு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். அனுஷா தனது மாமனார் - மாமியாருடன் பெண்ணைவலத்தில் வசித்து வந்தார். தற்போது அவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், பாலாஜி தனது மனைவி அனுஷாவிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று சென்னையில் இருந்த பாலாஜி, செல்போன் மூலம் அனுஷா விடம் பேசியபோது மீண்டும் வரதட்சணை தொடர்பாகப் தகராறு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த அனுஷா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த திருவெண்ணெய் நல்லூர் போலீசார், அனுஷாவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அனுஷாவின் தாய் கல்யாணி அளித்த புகாரின் பேரில், பாலாஜி, மாமனார் சிவசங்கர், மாமியார் சுமதி மற்றும் நாத்தனார் சுமித்ரா ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திரு மணம் ஆகி 11 மாதங்களே ஆவதால், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் இதுகுறித்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
30 ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம்
கிருஷ்ணகிரி, பிப். 22- தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதை யொட்டி, நிர்வாகக் காரணங்களுக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 30 ஊராட்சி செயலாளர்கள் திண்டுக்கல் மாவட்டத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 30 செயலாளர்கள் கிருஷ்ணகிரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக
மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். போலி நகை விவகாரம்: மாயமான மதிப்பீட்டாளர் சடலமாக மீட்பு
கிருஷ்ணகிரி, பிப். 22- கிருஷ்ணகிரியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான போலி நகை களை வைத்து முறைகேடு செய்த விவகாரத்தில், மாய மான நகை மதிப்பீட்டாளர் குணசேகரன் (40) ஆந்திர மாநிலம் குப்பம் அருகே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணை யில் தெரியவந்துள்ளது.
புதுச்சேரியிலிருந்து சாராயம் கடத்தியவர் கைது
விழுப்புரம், பிப். 22- விழுப்புரம் அருகே புதுச்சேரி சாராயம் கடத்தியவரைப் போலீசார் கைது செய்தனர். வானூர் வட்டம் பொம்பூர் ஏரிக்கரை சாலையில் மயிலம் போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் 50 சாராய பாக்கெட்டுகளைக் கடத்தி வந்த ரமேஷ் (43) என்பவரைப் பிடித்தனர். அவரிடமிருந்து சாராய பாக்கெட்டுகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரம் நகராட்சி பள்ளியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி விழுப்புரம், பிப். 22- விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலாள ரும் முதுநிலை சிவில் நீதிபதியுமான ஜெயச் சந்திரன் கலந்துகொண்டு, பொது இடங்களில் புகைப் பிடித்தல் தடைச்சட்டம் மற்றும் போதை மருந்துகள் தடுப்புச் சட்டம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி னார். ஒழுக்கமே மேன்மை யானது என அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.