tamilnadu

img

சிபிஎம் மூத்த தோழர் ஏ. நடராஜன் காலமானார்

சிபிஎம் மூத்த தோழர் ஏ. நடராஜன் காலமானார்

திருவண்ணாமலை, பிப். 22- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் - திருவண்ணாமலை ஒன்றுபட்ட வட ஆற்காடு மாவட்டக் குழு உறுப்பி னராகவும், திருவண்ணாமலை மாவட்டக் குழு உறுப்பினராகவும், விவசாயிகள் சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கங்களின் ஸ்தாபகத் தலைவராகவும் செயல்பட்ட மூத்த தோழர் புரட்சி நடராஜன் என்று அழைக்கப்படும் ஏ. நடராஜன் (79), ஞாயிற்றுக்கிழமை பிப்.22 காலை 11 மணியளவில் உடல்நலக் குறை வால் காலமானார். அவருக்கு ரெனவியாமேரி என்ற மனைவியும், நான்கு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம். சிவக்குமார், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எ. லட்சுமணன், வட்டாரச் செயலாளர் பி. கணபதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச் சடங்குகள் திங்கள்கிழமை (பிப்.23) காலை 11 மணியளவில் செங்கம் அடுத்த துக்காப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.