சென்னை:
தமிழகத்தில் மீண்டும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தொடங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.தமிழக நிதியமைச்சர் தாக்கல் செய்த 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்திய வரவு செலவு அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் வருமாறு:சாலை பாதுகாப்பு திட்டத்திற்காக பல்வேறு துறைகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு. மேட்டூர், அமராவதி, பேச்சிப் பாறை உள்ளிட்ட அணைகளின் நீர்மட்ட அளவை மீண்டும் பழையநிலைக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் 1000 தடுப்பணைகளும், கதவணைகளும் கட்டப்படும்
குக்கிராமங்களில் அடிப்படை உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தொடங்கப்படும். 2021 - 22 ஆம் ஆண்டிற்குள் 200 குளங் களை தரம் உயர்த்த ரூ.111.24 கொடி ஒதுக்கீடு செய்யப்படும். நமக்கு நாமே திட்டம் ரூ.100 கோடியில் மீண்டும் செயல்படுத்தப்படும். மாநகராட்சிகளில் நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கப்படுவது உறுதி செய் யப்படும்.
புதிதாக 6 மீன்பிடி துறைமுகம்
தரங்கம்பாடி, திருவொற்றியூர், அழகன்குப்பம் மற்றும் ஆற்காட்டுத்துறையில் மீன்பிடித் துறை முகத்திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவைவிரைந்து நிறைவுசெய்யப்படும். புதிதாக 6 இடங்களில் மீன்பிடிதுறை முகங்களை அமைக்க மொத்தம் 6.25 கோடி ரூபாய் செலவில் ஆய்வுகள் மேற் கொள்ளப்படும். சென்னை துறைமுகப் பொறுப்புக்கழகத்துடன் இணைந்து, சென்னையில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகம் மொத்தம் 150 கோடி ரூபாய் செலவில்மேம் படுத்தப்படும்.மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்குதளங்களை அமைக்க மொத்தம் 433.97 கோடி ரூபாயும், மீன் இறங்குதளங்களை மேம்படுத்த 143.46 கோடி ரூபாயும் ஒதுக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களின் நலனுக்காக ஒட்டுமொத்தமாக 1,149.79 கோடிரூபாய் ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது.
குப்பைகள் இல்லா நகரங்கள்!
குப்பைகள் உருவாகும் நிலையிலேயே 100 சதவிகிதப் பிரித்தலை உறுதி செய்வதன் வாயிலாகவும், வீடுகள்தோறும் குப்பைகள் சேகரித்தல் மற்றும் 100 சதவிகிதம் அகற்றுவதன் வாயிலாகவும் நாம் குப்பை இல்லா நகரங்களை உருவாக்குவோம். அனைத்து நகரங்களிலும் தேவையான திடக்கழிவு மேலாண்மை வசதிகள் ஏற்படுத்தப்படும் மற்றும் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள மண் சாலைகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபாதைகள்
அனைத்து நகர்ப்புரங்களிலும் பாதசாரிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயன்படுத்தத்தக்க நடைபாதைகள் அமைக்கப்படும். அனைத்து நகரங்களிலும் 30 மீட்டர் இடைவெளியில் தெரு விளக்குகள் நிறுவப் பட்டு அனைத்து தெரு விளக்குகளும் ஆற்றல் திறன் மிக்க விளக்குகளாக மாற்றியமைக்கப்படும்.
ரூ.1000 கோடியில் நகர மேம்பாட்டுத்திட்டம்
பதினைந்தாவது நிதிக்குழு தனது அறிக்கையில் தமிழ் நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மிகக்குறைந்த அளவே நிதி ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டுமக்களின் எதிர் பார்ப்புகளை நிறைவு செய்யும் நோக்கத்தில், ‘கலைஞர்நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டம்’ என்ற புதியதிட்டத்திற்கு ரூ. 1,000 கோடி மதிப் பீட்டில் இந்தஅரசு 2021-22 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்த உள்ளது. 76) சீர்மிகு நகரங்கள் திட்டம் மற்றும் அம்ருத் திட்டத்தின்கீழ், நிறைவு பெறாத திட்டங்கள் அனைத்தும் 31.3.2023க்குள் நிறைவு செய்யப்படும். 2021-22-க்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளில், சீர்மிகு நகரங்கள் திட்டத்திற்கு 2,350 கோடி ரூபாயும், அம்ருத் திட்டத்திற்கு 1,450 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.