tamilnadu

முதலமைச்சரின் ஆலோசனைக்  கூட்டம் ரத்து

சென்னை, ஜூன் 19- தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலம் நடத்த இருந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் புதனன்று (ஜூன்19) பொது உடல் பரிசோதனைக்காக சென்றார். இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு சென்று ஓய்வு  எடுத்ததால் தலைமைச் செயலகத்துக்கு வரவில்லை. இதையடுத்து, குடிநீர் தட்டுப்பாடு  தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோருடன் காணொலிக் காட்சி மூலம் நடத்துவதாக இருந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.