சென்னை:
கொரோனா தடுப்பூசிகளை பொதுத்துறை நிறுவனங்களில் உற்பத்தி செய்ய வலியுறுத்தி புதனன்று (ஆக.4) சென்னையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனிடையே சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கிண்டி பிசிஜி, குன்னூர் பாஸ்டியர், செங்கல் பட்டு இந்துஸ்தான் பயோடெக் உள்ளிட்டு நாடு முழுவதும் 11 பொதுத்துறை நிறுவனங்கள் தடுப்பூசிகளை தயாரிக்கின்றன. அந்நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்காமல், 2 தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே தடுப்பூசிகளை தயாரிக்க ஒன்றிய அரசு அனுமதித்துள்ளது.கொரோனா உயிர் இழப்பிலிருந்து மக்களை பாதுகாக்க அனைவருக்கும் இலவச தடுப் பூசி வழங்க வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களில் உற்பத் திக்கு அனுமதித்தால் உற்பத்தி அதிகரிக்கும். 40 ரூபாய்க்கு தடுப்பூசிகள் கிடைக்கும்.கொரோனா தொற்று பரவல் காரணமாக, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பயணிக்கும் முன்பதிவில்லா ரயில் பெட்டிகளை ரயில்களில் இணைக்க வேண்டும்; நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார் தலைமை தாங்கினார். பொருளாளர் தீபா, துணைத்தலைவர் கார்த்தீஷ் குமார், இணைச் செயலாளர்கள் சி.பாலசந்திரபோஸ், சுசீந்திரா, தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ், செயலாளர் ப.ஆறுமுகம், மத்தியசென்னை மாவட்டத் தலைவர் மணிகண் டன், செயலாளர் மஞ்சுளா, வடசென்னை மாவட்டச் செயலாளர் சரவணத்தமிழன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.