tamilnadu

img

கப்பல் படை எழுச்சி தினத்தை முன்னிட்டு வேலையின்மைக்கு எதிராக வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், பிப்.18 - கப்பல் படை எழுச்சி தினத்தை முன்னிட்டு, இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கத்தினர் செவ்வாயன்று வேலையின் மைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.  இளைஞர்களுக்கு வேலையின்மை அதிகரித்துள்ள நிலையில், கப்பல் படை  எழுச்சி தினமான செவ்வாயன்று சேலம்  மாநகரம் அம்மாபேட்டை காந்தி மைதா னத்தில் உள்ள காந்தி சிலை முன்பு வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக வாலிபர் சங்கத்தினர் பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் வெங்க டேஷ், கிழக்கு மாநகர தலைவர் பிரபாகரன், மாநகர செயலாளர் பெரியசாமி, மேற்கு மாநகர தலைவர் வி.ஜெகநாதன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.