புதுச்சேரி, ஜூலை 30- புதுச்சேரி சுகாதாரத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரோனா தடுப்பூசியை அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் தயாரித்து, அனைத்து மக்களுக்கு இலவசமாக விரைந்து செலுத்த வேண்டும். புதுச்சேரியில் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்தி காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கொரோனா நோயாளிகளிடம் கட்டணமாக வசூலித்த பணத்தை சென்னை உயர்நீதி மன்ற உத்தரவுப்படி புதுச்சேரி அரசு உடனடி யாக திரும்ப வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் ஆனந்த் தலைமை தாங்கினார். பிரதேச செயலா ளர் சரவணன், மாணவர் சங்க பிரதேச தலை வர் ஜெயபிரகாஷ் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். இதில் பிரதேச குழு உறுப்பி னர்கள் சஞ்சய், அஜித், நிர்வாகிகள் சத்யா, செல்வராஜ், நவீன், ஜஸ்டின் உட்பட பலர் பங்கேற்றனர்.