tamilnadu

img

புதிய மருத்துவர்களை தேர்வு செய்யும் அதிமுக அரசு

சென்னை:
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வுகாணாமல் புதிதாக 188 மருத்துவர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியதாக அதிமுக அரசு அறிவித்துள்ளது. சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை அழைத்துப் பேசி,தீர்வுகாணாமல் அதிமுக அரசு அராஜகமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அரசியல் கட்சியினர் கண்டித்துள்ளனர். நோயாளிகளின் நலன்கருதி மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் இல்லாவிடில் அந்த இடங்கள் காலி பணியிடங்களாக அறிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.ஆனால்அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் குறித்து பேசமறுக்கின்றனர் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர்.இந்நிலையில்  சுகாதாரத்துறை செயலாளர் பீலாராஜேஷ் வியாழனன்ற செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசு மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில்ஈடுபட்டு வரும் நிலையில் புதிதாக 188 மருத்துவர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. நாளை (வெள்ளி) அவர்களுக்கு பணிநியமன ஆணைவழங்கப்படும். தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப நாளை (வெள்ளி) காலை வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது என்றுதெரிவித்தார்.