சென்னை:
சட்டவிரோத பேனர் வழக்கில் தமிழக அரசின் செயல்பாடுகள் நீதிமன்றத் தையே சோர்வடையச் செய்துவிட்ட தாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது. சட்டவிரோத பேனர்கள் விவகாரம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எம்.நிர்மல் குமார் அமர்வில் விசாரணை நடைபெற்றது.சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையை அறிக்கை யாக தாக்கல் செய்ய தமிழக அரசு மீண்டும் ஒரு வாரம் கால அவகாசம் கோரியது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழக அரசு தொடர்ந்து கால அவகாசம் கோருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலை நீடித்தால் உள்துறைசெயலாளரை நேரில் ஆஜராக உத்தர விட நேரிடும் என்று எச்சரித்தனர். சாதாரண மனிதர்கள் தவறு செய்தால் தண்டனை வாங்கி கொடுக்கும் அரசு, அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கால அவகாசம் கோரு வது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சட்ட விரோத பேனர் வழக்கில் தமிழகஅரசின் தொடர் செயல்பாடுகள் நீதிமன்றத்தையே சோர்வடைய செய்துவிட்ட தாகவும் அரசின் செயல்பாடுகளால் மனுதாரரிடம் மன்னிப்பு கோரும் நிலையை நீதிமன்றத்திற்கு தமிழக அரசு ஏற்படுத்திவிட்டதாகவும் இதனால் அரசுக்கு காலஅவகாசம் வழங்க முடியாது எனவும் கூறினர். அரசு தலைமை வழக்கறிஞர் நாளை நேரில் ஆஜராகி சட்டவிரோத பேனர்கள் மீது எடுக்கப்பட்ட நட வடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.