ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம்: சிபிஎம் கண்டனம்
சென்னை, செப்.12- சென்னை வேளச்சேரியில் அதிமுவினர் விதிமுறைகளை மீறி வைத்த பேனர் சரிந்து விழுந்தபோது அதில் சிக்கிய இளம் பெண் லாரிமோதி உயிரிழந்தார். ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகத்தால் இளம் பொறியார் பலியான சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- எதிர்கட்சியினர், ஜனநாயக இயக்கங்கள் நடத்தும் போது, தட்டி பேர்டுகள் வைப்பதற்கும், சுவரொட்டிகள் ஒட்டுவதற்கும் கூட காவல்துறையினர் அனுமதிப்பதில்லை. ஆனால், ஆளுங்கட்சியினர் தங்களது கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களின் பிறந்த தினம், திருமண நிகழ்வுகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளின் போது ஆள் உயர கட் அவுட், பேனர்களால் சாலையை மறித்துக் கொண்டு விதிமுறைகளை மீறி வைப்பதற்கு மட்டும் அனுமதித்து வருகின்றனர். மேலும், பேனர்கள் சரிந்து கீழே விழுவதும், இதனால் உயிரிழப்பு, படுகாயம் போன்ற சம்பவங்கள் நடைபெறுவதும் தொடரும் வாடிக்கையாக உள்ளது. ஏற்கனவே இது குறித்து உயர்நீதிமன்றம் விதிமுறைகளை மீறி பேனர் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.
ஆனால், நீதிமன்ற உத்தரவை காவல் துறையினரும், தமிழக அரசும், அதிகாரிகளும் கண்டும், காணாமலும் இருந்துள்ளதன் விளைவே இந்த உயிரிழப்பு சம்பவம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே, பொதுமக்களுக்கு இடையூறாகவும், விதிமுறைகளை மீறியும் பேனர், கட்அவுட் வைக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் தலைவர்கள் பிறந்த தினம், பாராட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளை பொதுவாக நடத்துவதில்லை. அதே போல திருமண நிகழ்ச்சிகளின் போதும் விதிமுறைகளை மீறி கட் அவுட், பேனர்கள் போன்றவற்றை எப்போதும் வைப்பதில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம். ஆளும் கட்சியினரின் அராஜக, அதிகார துஷ்பிரயோக நடவடிக்கைகளால் ஏற்பட்ட இளம்பெண் சுபஸ்ரீ-யின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது குடும்பத்தாருக்கு அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
புதுவையிலும் பேனர் வைக்க தடை
புதுச்சேரி, செப்.13- விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க புதுவையில் பேனர் வைப்பதற்கு தடை விதிப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தைச் போலவே புது வையிலும் பேனர் கலாச்சாரம் இருக்கிறது. இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க புதுவையில் பேனர் வைப்பதற்கு தடை விதிப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய முதலமைச்சர் நாராயணசாமி, “தமிழகத்தில் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள் ளாக்கியுள்ளது. புதுவையில் இதுபோன்ற பேனர்கள் வைப்பது தவிர்க்கப்பட வேண்டும். புதுவை அழகாக இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இதனால் அனுமதியின்றி அரசியல் கட்சி யினரோ, தனி நபர்களோ பேனர் அமைக்கக்கூடாது. பேனர் வைப்பது விதிமீறிய செயல். பேனர் வைப்பவர்கள் மீது அதி காரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
பேனர்கள் அமைப்பதால் போக்குவரத்தில் பல அசம்பா வித சம்வபங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே அதிகாரி கள் பேனர்கள் அமைப்பதை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக உள் ளாட்சித் துறை, பொதுப் பணித்துறை அதிகாரிகள் பேனர்கள், கட்-அவுட்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும். பேனர், கட்-அவுட் அகற்றுவ தற்கான செலவையும் பேனர் வைத்தவர்களிடம் பெற வேண் டும் என்றும் அவர் கூறினார். பேனர்களை அதிகாரிகள் அகற்றாவிட்டால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்ப டும். இதை உள்ளாட்சித்துறை அமைச்சருடன் கலந்து பேசி முடிவெடுத்துள்ளோம். உள் ளாட்சித்துறை அமைச்சர் இதற்கு ஒப்புதல் அளித்துள்ள தாவும் இந்த உத்தரவு வெள்ளிக்கிழமை (செப்.13) முதல் அமலுக்கு வருகிறது. உட னடியாக நகரம், கிராமப் பகுதி யில் அமைக்கப்பட்டுள்ள பேனர் கள் அகற்றப்படும். நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அனு மதியின்றி எந்த பேனரும் வைக்கக்கூடாது. மீறி வைத் தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல மைச்சர் தெரிவித்தார்.
திமுக நிகழ்ச்சிகளில் பேனர் கூடாது: மு.க.ஸ்டாலின்
சென்னை, செப்.13- திமுக நிகழ்ச்சிகளுக்கு பேனர்கள், கட்-அவுட் கள், பிளக்ஸ் போர்டுகள் வைத்தால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுகவினரின் பேனர் மற்றும் கட் அவுட் கலாச்சாரத்தால் சுபஸ்ரீ என்ற மற்றுமொரு இளம்பெண் பலியாகி யிருப்பதாகக் கூறியுள்ளார். பொது மக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடை யூறான வகையில் திமுக நிகழ்ச்சிகளில் பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என ஏற்கனவே பல முறை அறிவுறுத்தியுள்ளதாக வும், மீண்டும் அறிவுறுத்துவதாகவும் அவர் தெரி வித்துள்ளார். நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்களை விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைக்கலாமே தவிர சாலை மற்றும் தெரு நெடுகிலும் வாகன ஓட்டிகளுக்கும், மக்களுக்கும் பேரிடர் ஏற்படும் வகையில் வைப்பதை ஏற்க முடியாது. இந்த அறி வுரையை யாரேனும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். தான் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக பேனர், கட் அவுட் வைத்தால் அதில்பங்கேற்கப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.
பேனர்கள் வைக்கக் கூடாது: அதிமுக தலைமை அறிவிப்பு
கட் அவுட்டுகள், பிளக்ஸ் போர்டுகள், பேனர்களை தவிர்க்குமாறு அதிமுகவினரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக நிகழ்ச்சிகள் மற்றும் அதிமுக-வினரின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு மற்றும் விளம்பரம் என்ற வகையில் மக்களுக்கு இடையூறு செய்யும் பேனர்கள் வைப்பதை நிறுத்திவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு சிலர் ஆர்வம் மிகுதியாலும், விளைவுகளை அறியாமலும், நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை அறியாமலும் செய்யும் செயல்களால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாவதாகவும், எந்தச் சூழ்நிலையிலும், எந்தக் காரணத்துக்காகவும், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட் அவுட்டுகள், பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சர் எச்சரிக்கை
மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் யார் பேனர் வைத்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னை தீவுத் திடலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேனர் விழுந்து இளம் பெண் உயிரிழந்தது குறித்து வருத்தம் தெரிவித்த அவர், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அச்சகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் யார் பேனர் வைத்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கடமை தவறிய அதிகாரிகளே பொறுப்பு: சிபிஐ விமர்சனம்
சென்னை, செப்.13- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டி ருக்கும் அறிக்கையில், “அரசியல் கட்சிகள், அமைப்புகளை சார்ந்தவர்கள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி சாலைகளை மறித்து பெரும் பெரும் பேனர்களை வைப்பதன் மூலம் இத்தகைய துயரச் சம்பவங்கள் தொடர்கின்றன. நீதிமன்றம் தொடர்ந்து எச்சரித்தும் கூட அவைகள் மதிக்கப்படாத நிலை தொடர்கின்றது” என்று தெரி வித்திருக்கிறார். அதிகாரிகள் - காவல்துறையினரின் பாரபட்சமான நடவடிக்கைகள் தான் இத்த கைய துயரச் சம்பவங்களுக்கு காரண மாகும். அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்து பவர்களைக் கண்டு அதிகாரிகளும், காவல்துறையினரும் அஞ்சி நடுங்கி, தங்களின் கடமைகளை செய்யத் தவறு கின்றனர். பேனர்கள், கொடிகள் அமைப்ப தற்கான பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்த போதும் அவைகளை செயல்படுத்துவது இல்லை. இத்தகைய காரணங்கள் போக்கு வரத்து முற்றிலும் பாதிக்கப்படுவதுடன் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் பறிக்கப்படுகின்றன. சுபஸ்ரீ-யின் மரணத்திற்கு காரண மானவர்கள் மீது சட்டரீதியான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், அவரது இழப்பிற்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.