tamilnadu

img

உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய நடவடிக்கை

சேலம், ஏப்.6- உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பேன் என சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வாக்குறுதி அளித்தார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் போட்டியிடுகிறார். இவர் அஸ்தம்பட்டி உழவர் சந்தை வியாபாரிகளிடம் கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களைவிற்பனை செய்வதற்காக முதன் முதலில்தமிழகத்தில் உழவர் சந்தையை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதிட்டத்தை கொண்டு வந்தவர் திமுகமுன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. அவர்வழியில் திமுக ஆட்சி வந்தவுடன் விவசாயிகளின் பிரச்சனைகள்சரி செய்யப்படும். விவசாயிகள் உற்பத்தி செய்யும்பொருட்களை விற்பனை செய்வதற்காகஉழவர் சந்தைகள் விரிவுபடுத்தப்படும்.விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விவசாய கடன் ரத்து, விவசாய நகை அடமான கடன் ரத்து உள்ளிட்டவை செயல்படுத்தப்படும். விவசாயிகளுக்கான தனி பட்ஜெட்டை மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் கொண்டுவரப்படும். கேஸ் விலை குறைக்கப்படும். உணவுப்பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி அனைத்தும் ரத்து செய்யப்படும். விவசாயிகளின்வாழ்வாதாரம் செழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே உதயசூரியன்சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.மேலும், சேலம் வடக்கு சட்டமன்றதொகுதிக்கு உட்பட்ட சாமிநாதபுரம், அரிசிபாளையம், பால் மார்க்கெட், செவ்வாய்ப்பேட்டை, பொன்னம்மாபேட்டை, அல்லி குட்டை உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகசென்று வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த பிரச்சாரத்தின் போது திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.