tamilnadu

img

ஆவின் வெண்ணெய் விலை உயர்வு!

ஆவின் நிறுவனத்தின் பால் மற்றும் நெய் விலை உயர்வை தொடர்ந்து, வெண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது.
தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனம், பால் மற்றும் பால் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் ஆவின் நிறுவனத்தில் 17 வகை இனிப்புகளின் விலை உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஆரஞ்சு பாக்கெட் பால் விலை ரூ.48-ல் இருந்து ரூ.60 ஆக உயர்த்தப்பட்டது. நேற்று ஆவின் நெய்யின் விலை ரூ.580-ல் இருந்து ரூ.630 ஆக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், இன்று வெண்ணெய் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, 100 கிராம் வெண்ணெய் ரூ.52-ல் இருந்து ரூ.55 ஆகவும், 500 கிராம் வெண்ணெய் ரூ.255-ல் இருந்து ரூ.265 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.