tamilnadu

img

தமிழகத்தில் தாக்குதல் நடத்தப்படும் என்று வதந்தி பரப்பியவர் கைது

தமிழகத்தில் ரயில்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் என்று வதந்தி பரப்பியவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். 

பெங்களூரு நகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 5.35 மணிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் , தனது பெயர் சுவாமி சுந்தர் மூர்த்தி என்றும், லாரி ஓட்டுநர் என்றும், ஓசூரை நோக்கி சென்றுகொண்டிருப்பதாகவும் அழைப்பில் பேசியவர் தெரிவித்துள்ளார். தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, புதுச்சேரி, கோவா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் ரயில்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளனர் என்று தெரிவித்தார். மேலும் ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள் இருப்பதாகவும் அந்த நபர் தெரிவித்தார். இதையடுத்து தமிழகம் மற்றும் கர்நாடகாவில் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு நடடிவக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தொலைபேசியில் பேசிய நபர் பெங்களூரில் கைதாகியுள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் அந்த நபரின் பெயர் சுந்தர மூர்த்தி என்பதும் அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பது தெரியவந்துள்ளது.