சென்னை:
குற்றப் பின்னணி குறித்து விசாரிக்காமல் காவல்துறையில் வேலை கொடுத்தால் இன்னொரு சாத்தான்குளம் சம்பவம் நடக்க அதிக வாய்ப்பிருக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக விழுப்புரம் மாவட் டத்தை சேர்ந்த பிரவீன்குமார் தாக்கல் செய்த மனுவில், 2016ல் பதிவான மிரட்டல் தொடர்பான வழக்கில் விடுவிக்கப்பட்ட போதிலும், காவலர் பணிக்கு தாம் சேர்க்கப் படவில்லை என்றும், ஆதலால் காவலர் பணிக்கு சேர்க்கப்படாதது தொடர்பான உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருந்தார்.இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் குற்ற வழக்கிலிருந்து கவுரவமாகவிடுதலை ஆகவில்லை என்றும், சந்தேகத் தின் பலனாகத்தான் விடுதலை செய்யப் பட்டார் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஒழுக்கம் சார்ந்த பணியான காவல் துறைக்கு, குற்ற வழக்கில் முன்பு சிக்கிய மனுதாரர் உரிமை கோர முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.