சென்னை, மே 24 - பொதுமக்களிடையே கொரோனா தொற்று பரவலை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கப சுர குடிநீர் வழங்கி வருகின்றனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டம் எழும்பூர் பகுதி, சாஸ்திரி நகரில் சக்திவேல் தலைமையில் வீடு வீடாக சென்று கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வை இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் மிரு துளா தொடங்கி வைத்தார். நேரு பார்க் பகுதியில் மோகன் தலைமையில் நடை பெறும் கபசுர குடிநீர் வழங்கல் நிகழ்வை பகு திக்குழு உறுப்பினர் செல்வமும், சேத்துப் பட்டு பகுதியில் ஹிகாந்த் தலைமையில் நடை பெற்ற நிகழ்வை பகுதித்தலைவர் வெங்க டேசும் தொடங்கி வைத்தார். வில்லிவாக்கம் பகுதி பி.வி கோயில் தெரு வில் டேவிட் தலைமையிலும், அம்பேத்கர் நகர் பகுதியில் நரேஷ் தலைமையிலும் நடை பெற்ற கபசுர குடிநீர் வழங்கலை மத்திய சென்னை மாவட்டத் தலைவர் கே.மணி கண்டன் தொடங்கி வைத்தார். சிட்கோ நகரில் கலாநிதி தலைமையில் நடைபெற்ற குடிநீர் வழங்கலை டோனி துவக்கி வைத்தார்.