சென்னை:
ஜூலை மாதம் 71 லட்சம் டோஸ் தடுப்பூசி தருவதாக ஒன்றிய அரசு கூறி யுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணி யன் கூறியுள்ளார். தமிழகத்தில் கையிருப்பில் இருந்த தடுப்பூசிகள் திங்களுடன் நிறைவடைய உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்திருந்தது. தடுப்பூசி தட்டுப்பாட்டின் காரணமாக சென்னையின் பல முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் தடுப்பூசி செலுத்து வதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆனால், தடுப்பூசி இல்லாமல் மக்கள் திரும்பிச் செல்வது வேதனை அளிப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை அறிந்த ஒன்றிய அரசு, 2 லட்சம் தடுப்பூசிகளை அனுப்பி வைத்தது. தடுப்பூசிகள் திங்களன்று மாலை சென்னை வந்தன. இந்த தடுப்பூசிகள் ஒருநாள் தேவைக்கே போதுமானதாக இருக்காது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு ஜூலைமாதம் 71 லட்சம் தடுப்பூசி தருவதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது என மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். இதுவரை 1.44 கோடி கொரோனா தடுப்பூசி பெறப்பட்டு 1.41 கோடி பேருக்கு போடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.