tamilnadu

img

செஸ் ஒலிம்பியாட் போட்டி: ஜெர்மனியில் இருந்து வரவழைத்த 700 எலக்ட்ரானிக் செஸ் போர்டுகள்!  

44வது செஸ் ஒலிம்பியாட் செஸ் போட்டிக்கு ஜெர்மன் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட 700 எலக்ட்ரானிக் செஸ் போர்டுகளை சர்வதேச ஒலிம்பியாட் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளன.   

சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறவுள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 2,500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இதற்கான முன்னேற்பாடுகள் மாமல்லபுரத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

செஸ் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா மற்றும் நிறைவு நிகழ்ச்சிகளை பிரம்மாண்ட முறையில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசர் வீடியோவை வெள்ளிக்கிழமை இரவு நடிகர் ரஜினிகாந்த் அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

மேலும் இந்த போட்டிக்கு 22 ஆயிரம் சதுர அடியில் ஒரு அரங்கமும், 52 ஆயிரம் சதுர அடியில் 2வது அரங்கம் என இரண்டு அரங்கத்தில் செஸ் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அரங்கம் 1ல் 196 டேபில் போடப்பட்டு அதில் 49 அணிகள் பங்கேற்க உள்ளன. அரங்கம் 2ல் 512 டேபில் போடப்பட்டு 49 அணிகள் அதில் பங்கேற்க உள்ளன. இதற்காக தற்போது ஜெர்மன் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட 700 எலக்ட்ரானிக் செஸ் போர்டுகள் சர்வதேச ஒலிம்பியாட் போட்டி குழுவினர் வரவழைத்துள்ளனர்.

இதில் முதல் கட்டமாக தயாராகி வரும் 512 டேபில் போடப்பட்டுள்ள 2வது அரங்கத்தில் டிஜிட்டல் செஸ் போர்டுகள் டேபில் வாரியாக கணினியுடன் இணைக்கும் கேபிளுடன் இணைக்கப்பட்டன.  அதேபோல் அனைத்து செஸ் போர்டுகளையும் கணினி மூலம் இணைக்கும் வசதிகளும் மென்பொருள் பணியாளர்கள் மூலம் செய்யப்பட்டு வருகின்றன.