உடுமலை, ஜூலை 14 - 200 நாடுகள், ஆயிரத்திற்கு மேற் பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ள செஸ் ஒலிம்பியாட் திருவிழா ஜூலை 28 ஆம் முதல் ஆகஸ்ட் 10 ம் தேதி வரை சென்னை மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. பல்வேறு நாட்டு வீரர்கள், பயிற்சி யாளர்கள், அணி மேலாளர்கள் என 2,500 பேர் பங்கேற்கும் போட்டி என்பதால் விமானப் போக்குவரத்து, தங்குமிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி களை தமிழக அரசு போர் கால அடிப்ப டையில் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த செஸ் போட்டி கள் குறித்து பள்ளி மாணவ, மாணவி கள், பொதுமக்கள் இடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் தமி ழக அரசு இறங்கியுள்ளது. இதன்படி உடுமலையில் தனியார் பள்ளி மற்றும் அரசு பேருந்துகளில் சென்னையில் நடைபெறும் சர்வதே செஸ் போட்டிகள் குறித்து விழிப்பு ணர்வு பதாகைகள் ஒட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.