tamilnadu

போக்குவரத்து தொழிலாளி குடும்பத்தில் 6 பேருக்கு தொற்று

சென்னை, ஜூலை 1- வடபழனி போக்குவரத்து பணிமனை ஊழி யர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்  பட்டுள்ளார். அவரது குடும்பத்தில் உள்ள 6 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநகர போக்குவரத்து கழகத்தில் வட பழனி பணிமனை, கணினி பிரிவில் இளநிலை  உதவியாளராக முனிரத்தினம் பணிபுரிகிறார்.  கடுமையான காய்ச்சல் இருந்த போதும் அவரை கிளை மேலாளர் ஜூன் 21 முதல் 23ந்  தேதி வரை பணி செய்ய நிர்ப்பந்தப்படுத்தி யுள்ளார். அவருடன் பல தொழிலாளர்கள் இணைந்து பணி புரிந்துள்ளனர். இந்நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. மேலும் அவரது குடும்பத்தில் உள்ள 5 வயது குழந்தை உட்பட 6 பேர் வரை  பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை கிளை மேலாளர் தமி ழக அரசின் சுகாதார துறைக்கு தெரிவிக்கா மல் அலட்சியமாக உள்ளார். மேலாண்மை இயக்குநர் உடனடியாக தலையிட்டு பணி மனையையும், அலுவலக ஊழியர்களையும் தனிமைப்படுத்த வேண்டும். மேலும், முனி ரத்தினத்துடன் பணிபுரிந்த இடத்தை கிரிமி நாசினி தெளித்து சுத்தம் செய்வதோடு, அவரு டன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து  பரிசோதனை செய்ய வேண்டும். இவ்வாறு மாநகர போக்குவரத்து கழக  மேலாண் இயக்குநருக்கு அரசாங்க போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலா ளர் ஏ.தயானந்தம் அனுப்பியுள்ள புகார் மனு வில் கூறப்பட்டுள்ளது. வடபழனி பனிமனையில் ஏற்கெனவே ஒரு  ஓட்டுநருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்  ளது குறிப்பிடத்தக்கது.