tamilnadu

தமிழகத்தில் 5.98 கோடி வாக்காளர்கள்

சென்னை, ஏப்.14-மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான திருத்தப் பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை தொகுதிவாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 18 முதல் 19 வயது வரை 12 லட்சத்து 12 ஆயிரத்து 550 வாக்காளர்கள் உள்ளனர். 20 முதல் 29 வயது வரைக்கும் 1 கோடியே 20 லட்சத்து 95 ஆயிரத்து 249 பேரும் 30 முதல் 39 வயது வரையில் 1 கோடியே 39 லட்சத்து 44 ஆயிரத்து 994 பேரும் வாக்களிக்க உள்ளனர்.40 முதல் 49 வயது வரைக்கும் 1 கோடியே 28 லட்சத்து 7 ஆயிரத்து 48 வாக்காளர்களும், 50 முதல் 59 வயது வரையில் 96 லட்சத்து 16 ஆயிரத்து 909 பேரும், 60 முதல் 69 வயது வரை 61 லட்சத்து 35 ஆயிரத்து 328 பேரும், 70 முதல் 79 வயது வரையில் 30 லட்சத்து 50 ஆயிரத்து 173 பேரும் 80 வயதிற்கும் கூடுதலாக 10 லட்சத்து 7 ஆயிரத்து 507 பேரும் வாக்களிக்க தகுதியுடையவர்களாவர்.