கடன் வழங்கும் நிறுவனங்கள், கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
வங்கி அல்லாத கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் பெற்றவர்களிடம் கடனை வலுக்கட்டாயமாக வசூல் செய்வதை தடை செய்வதற்கான சட்ட மசோதாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 26-ஆம் தேதி அறிமுகம் செய்தார். இம்மசோதாபடி, 20-ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ள மிரட்டல் விடுத்தல், பின் தொடருதல் போன்ற குற்றங்களைச் செய்தால், 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படும். வெளி முகமைகளை பயன்படுத்துதல், ஆவணங்களை எடுத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
இந்த மசோதாவுக்கு சிபிஎம், சிபிஐ, த.வா.க, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு கொடுத்துள்ளன. இதை தொடர்ந்து இம்மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.