கடலூர் மாவட்டத்தில் 38 கிராமங்கள் காவிரி டெல்டா பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் திருமுட்டம் வட்டத்தில் உள்ள 38 கிராமங்களை காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில், கடந்த ஜூலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
