சென்னை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற் கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நிர் வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.முன்னாள் முதலமைச்சரும், மறைந்த திமுக தலைவருமான மு.கருணாநிதியின் 2ஆம் ஆண்டு நினைவு நாள் வெள்ளியன்று (ஆக.7) அனுசரிக்கப்பட்டது,கொரோனா பேரிடர் காரணமாக பேரணி நடத்தப்படாத நிலையில் மெரீனா கடற்கரை சாலையில், திமுக தொண்டர்கள் அக்கட்சி கொடியை ஏந்தி, தனிமனித இடைவெளி விட்டு நின்றிருந்தனர்.
அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின், பின்னர் கலைஞரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இதைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயம் சென்ற மு.க.ஸ்டாலின், அங்கு கலைஞர் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின், அங்கும் கலைஞரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்வில், துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
நலத்திட்ட உதவி
கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அதன் ஒரு பகுதியாக, கொரோனா பேரிடரில் பணி செய்துவரும் மருத்துவப் பணியாளர்கள் பணியாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கும் ஸ்டாலின் உதவிகளை வழங்கினார்.