ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் இரண்டு பாதிரியாளர்கள் உயிரிழந்தனர். பெங்களூர் கீதா ஹைலி பகுதியை சேர்ந்த பாதிரியார்கள் விக்டர் மோகன் (65) மற்றும் தாவீது (60) ஓட்டுனர் சாம்சன் (60) ஆகியோர் சென்னையில் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்று பெங்களூரு நோக்கி திரும்பி கொண்டிருந்தனர், அப்போது ஆம்பூர் அடுத்த வெங்கிலி பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பாதிரியார்கள் விக்டர் மோகன் மற்றும் தாவீது ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சாம் சன் படுகாயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார். இந்த விபத்து குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.