tamilnadu

img

100 நாள் வேலையை 200 நாட்களாக அதிகரித்திடுக! விவசாயத்தொழிலாளர்கள் நாளை கோரிக்கை முழக்கப்போராட்டம்

சென்னை, ஜூலை 26- 100 நாள் வேலையை 200 நாட்க ளாக அதிகரிக்க வேண்டுமென்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  ஜூலை 28 விவசாயத் தொழிலாளர் சங்கம் தாசில்தார் அலுவலகங்கள் முன்பு கோரிக்கை முழக்கப் போராட்டம் நடத்துகிறது.  இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர், மாநில பொதுச் செயலாளர் வீ.அமர்த லிங்கம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:  கிராமப்புற விவசாய கூலித் தொழிலாளிகள், சிறுகுறு விவசா யிகள், அணிதிரட்டப்படாத தொழி லாளர்கள், நகர்ப்புற உழைப்பா ளிகள், சாலையோர வியாபாரிகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற வர்கள் என பலகோடி இந்திய மக்கள் இருந்த உரிமையையும் உதவியையும் இழந்து பொருளா தாரத்தில் அடிஆழத்தில் எதிர்கா லத்தில் வாழவே முடியாது என்கிற  நிலையை நோக்கி போய்க்கொண் டிருக்கிறார்கள்.  ஆனால் ஆட்சியாளர்கள் இதை எதையும் கண்டு கொள்ளவில்லை. 

தமிழகத்தில் உள்ள அரசு மோடிக்கு சேவகம் செய்வதையே தனது கட மையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் இந்த நிலை மைகளையெல்லாம் தெரிந்து தொடர்ந்து உழைப்பாளிகளைத் திரட்டி போராடிவருகிறது. அடி மேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும் என்பதைப் போல இந்த சுயநல சிந்தனையாளர்களை எதிர்த்து போராடுவதில் உழைப்பா ளிகளைத் திரட்டி தொடர்ந்த போராடிக் கொண்டேயிருக்கிறது.  வருகிற ஜூலை 28ஆம் தேதி அன்று தாசில்தார் அலுவலகங்கள் முன்பு கோரிக்கை முழக்கம் நடத்தி முதலமைச்சருக்கு மனுக்க ளை அனுப்புவது என்று முடிவுசெய்துள்ளது.              

• 100 நாள் வேலையை 200நாள் வேலையாக மாற்றுக!

• சட்டக்கூலி ரூ.256ஐ தமிழகம் முழுவதும் அமல்படுத்துக; ஜாப் கார்டு உள்ள அனைவருக்கும் வேலை வழங்குக;

• பேரூராட்சி நகராட்சி பகுதிகளிலும் கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தை அமல்படுத்துக.
ரேசன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் உணவுப்பொருட்களையும் பலசரக்கு ஜாமான்களையும்  கொரோனா முடியும் வரை இலவசமாக வழங்குக;

• ஆறுமாதமாக பணியிழந்த அனைவருக்கும் குடும்பத்திற்கு மாதம் ரூ.7600 நிவாரணம் வழங்குக;

• 60 வயதான முதியோர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.3000 பென்சன் வழங்குக;

• அங்கன்வாடிகளை திறந்து அனைத்து குழந்தைகளுக்கும் உணவு கிடைத்திட நடவடிக்கை எடுத்திடுக;

• மைக்ரோ பைனான்ஸ் கடன்கள் அனைத்தையும் ரத்து செய்க!

இந்தகோரிக்கைகளுக்காக போராட்டத்தை நடத்துவது என்று அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்க மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.