tamilnadu

img

மகாபலிபுரம்; 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை-போக்சோவில் வாலிபர் கைது  

மகாபலிபுரத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோவில் கைது சிறையில் அடைத்தனர்.  

திருவண்ணாமலையை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் மகாபலிபுரம் அருகே உள்ள பழங்குடியினர் நலத்துறை உண்டு உறைவிட பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். விடுதியில் தங்கியிருந்த அவருக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதால் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இந்த நிலையில் வீட்டிற்கு வந்த மாணவி திடீரென எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை அறிந்த பெற்றோர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவியை பரிசோதித்ததில் 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.  

இதுகுறித்து சிறுமியின் தாய் திருவண்ணாமலை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி மாணவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்குறிச்சியை சேர்ந்த கூலித்தொழிலாளியான ஹரிபிரசாத்(31) என்பது தெரிய வந்தது. இவர் ஏற்கனவே காதல் திருமணம் செய்து திருவண்ணாமலை கரியான்செட்டி தெருவில் வசித்து வருகிறார்.    

இதையடுத்து நேற்று இரவு ஹரிபிரசாத்தை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். மேலும் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் குழந்தைகள் நல ஆணையத்திற்கோ, போலீசாருக்கோ தகவல் தெரிவிக்கவில்லை என விடுதி வார்டன் செண்பகவள்ளி மற்றும் உண்டு உறைவிட பள்ளியின் தலைமை ஆசிரியர் குமரகுருபரன் ஆகியோரை போலீசார் இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.